வாய் துர்நாற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த இதை ட்ரை பண்ணி பாருங்க.!?Home remedies for bad breathing

பொதுவாக வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக கருதப்பட்டு வருகிறது. இந்த வாய் துர்நாற்றம் பல காரணங்களினால் ஏற்படுகிறது. காலை மற்றும் இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். இதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம். இதையும் மீறி ஒரு சிலருக்கு வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் இருக்கும்போது வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

Mouth

1. படிகாரத்தை சிறிது துண்டு உடைத்து பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குணமடையும்.

2. வேப்பிலை குச்சியில் பல் துலக்கி வந்தால், வாய் துர்நாற்றம் உடனடியாக குணமடையும்.
3. வேப்பிலை சாறு மற்றும் மஞ்சள் கலந்து பல் துலக்கி வர வாய் துர்நாற்றம் குணமடைவதோடு, வயிற்றுப் புண்ணும் சரியாகும்.
4. கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் இருக்கும் புண்களினால் ஏற்படும் வாய்துர்நாற்றம் குணமடையும்.
5. கிராம்பை இடித்து பொடியாக்கி பல் துலக்கி வந்தாலோ அல்லது கிராம்பை ஊற வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தாலோ வாய் துர்நாற்றம் குணமாகும்..
6. அசைவ உணவு உண்டாலோ அல்லது இரவு தூங்குவதற்கு முன்பாகவோ வாயில் புதினா மற்றும் ஏலக்காயை சேர்த்து மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குணமடையும்.
7. ரோஜா இதழை பொடி செய்து பல் துலக்கி வர இதன் மூலம் வாய் துர்நாற்றம் உடனடியாக குணமடையும். மேலும் வாய் துர்நாற்றத்திற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.