மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
குளிர்கால சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா.? இந்த கசாயத்தை குடித்து பாருங்க.!?

குளிர்கால நோய்கள்
பொதுவாக குளிர்காலம் வந்தாலே பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமே சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. இந்த நோய்கள் பெரும்பாலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகின்றது. அந்த காலத்தில் நம் முன்னோர்களின் உணவும், உழைப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்தது.
நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?
நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து 80 வயது வரையிலும் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காகவும் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை விரட்டுவதற்காகவும் இந்த கசாயத்தை குடித்து வந்தனர். இதை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக காணலாம்.
இதையும் படிங்க: 60 வயதிலும் துள்ளி குதிக்க வைக்கும் இயற்கை மூலிகை.! வேறு என்னென்ன நன்மைகள் தரும்.!?
கசாயம் செய்ய தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் மிளகு,
1/2 ஸ்பூன் சீரகம்,
1/2 ஸ்பூன் மல்லி தூள்,
சிறிய துண்டு இஞ்சி,
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,
1 வெற்றிலை
செய்முறை
முதலில் இஞ்சி மற்றும் மிளகு வைத்து ஒன்று இரண்டாக இடித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு வெற்றிலையை சிறிது சிறிதாக கிழித்து போட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்த இஞ்சி, மிளகு மற்றும் வெற்றிலை சேர்த்து மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகம் போன்றவற்றையும் சேர்த்த தண்ணீர் ஒரு டம்ளர் வரும் அளவிற்கு நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் மிதமான சூட்டில் இந்த கஷாயத்தை தினமும் காலையில் காபி, டீ க்கு பதிலாக குடித்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா.? இதை ட்ரை பண்ணி பாருங்க.!?