60 வயதிலும் துள்ளி குதிக்க வைக்கும் இயற்கை மூலிகை.! வேறு என்னென்ன நன்மைகள் தரும்.!?



health-benefits-of-eating-pirandai

ஊட்டச்சத்து இல்லாத வாழ்க்கை முறை

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள், இளைஞர்கள் என பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணமாக கருதப்படுவது ஊட்டச்சத்து இல்லாத உணவு முறையும், வாழ்க்கை முறையும் தான் காரணம். நம் முன்னோர்கள் அந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்தான உணவையும், கடின உழைப்பையும் செய்து வந்ததால் நீண்ட ஆயுளுடன் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

பிரண்டையின் நன்மைகள்

மேலும் இயற்கை மூலிகையான பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டை நம் உடலில் பல வகையான நோய்களை தீர்ப்பதோடு, உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் என்று சித்தர்கள் கருதி வருகின்றனர். பிரண்டை குறித்து இப்பதிவில் விளக்கமாகக் காணலாம்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா.? இதை ட்ரை பண்ணி பாருங்க.!?

Herbal

பிரண்டையில் உள்ள சத்துக்கள்

"ஆஸ்தி சம்ஹாரம்" என்று ஆயுர்வேத முறைப்படி அழைக்கப்படும் பிரண்டையில்  பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்றவை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள அளவுக்கதிகமான கால்சியம் உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் தன்மையை உடையது. மேலும் வயிற்று உப்புசம், ஆஸ்துமா, கை, கால் வலி போன்றவையை குணப்படுத்தும்.

இதில் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கம், வெட்டுக்காயம், அதிக ரத்தப்போக்கு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை சரி செய்து 60 வயதிலும் துள்ளி குதிக்கும் ஆரோக்கியத்தை தருகிறது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த சத்து உடலில் குறைந்தால் மன அழுத்தம் ஏற்படுமா.! உடனே மருத்துவரை பாருங்க.!?