வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
சூப்பர் பிரேக் ஃபாஸ்ட் .!! சுவையான சத்து நிறைந்த ராகி அடை ரெசிபி.!!!
காலை உணவுக்கு எப்ப பாத்தாலும் இட்லி, தோசை, சப்பாத்தி கொடுத்து குழந்தைகளுக்கு போர் அடிச்சிருச்சுனா சத்தாவும் அதே நேரத்துல டேஸ்ட் ஆவும் இந்த ராகி அடை செஞ்சு கொடுங்க. ராகியில் கால்சியம் இரும்புச்சத்து புரதம் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்: 1 கப் ராகி மாவு, 1/2 கப் முருங்கை கீரை, 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும் அல்லது பச்சையாகவும் நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்க்கலாம். பின் ராகி மாவுடன் வெங்காயம், இஞ்சி, முருங்கை கீரை, பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீர் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கும் அளவுக்கு பிசைந்து கொள்ளவும். பின் ஒரு வாழை இலை எடுத்து அதில் எண்ணெய் தடவி சிறிதளவு மாவு வைத்த பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி முருங்கை கீரை அடை தயார். விருப்பப்பட்டால் இதற்கு சட்னி வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.