"ஆயுர்வேத முறையில் உடற்கழிவுகளை உடனடியாக வெளியேற்றுவது எப்படி.?

"ஆயுர்வேத முறையில் உடற்கழிவுகளை உடனடியாக வெளியேற்றுவது எப்படி.?



health-tips-latest-news

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நம் உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். நமக்கு நன்கு அறிமுகமான ஆயுர்வேதப் பொருட்களைக் கொண்டு நம் உடற்கழிவுகளை வெளியேற்ற முடியும்.

Health

நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஆயுர்வேதப் பொருட்களை பற்றி நாம் இங்கு பார்ப்போம். 'திரிபலா சூரணம்' உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவை கலந்துள்ளன.

மேலும் திப்பிலியை வறுத்துப் பொடியாக செய்து, தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தமடையும். முருங்கைக்கீரைப் பவுடரை சூப் செய்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினமும் சமையலில் மஞ்சளை உணவில் சேர்த்தால் கல்லீரல் சுத்தமடையும்.

Health

மேலும் ஆயுர்வேதப் பொருளான அஸ்வகந்தா, நம் உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் சுத்தமாகும்.