தினமும் அரைக்கீரை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா... பயனுள்ள டிப்ஸ்.!



Health tips aarai keeri benefits

அரைக்கீரையில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன‌. அரைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

அரைக்கீரையை குழம்பு அல்லது கூட்டு வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் நீங்கும். ஆண்கள் அரைக்கீரையை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு விரைவில் நீங்கும். அரைக்கீரையை தண்டுடன் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து கசாயம் போட்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் பிரச்சினை நீங்கும்.

health tips

கண் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து கண் குளிர்ச்சி அடையும். கண் பார்வை தெளிவு பெறும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் அரைக்கீரையை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.