குளிர்காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Health benefits sappota ate winter season

குளிர்காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கிறது. சப்போட்டா படத்தில் வைட்டமின் ஏ உள்ளது. எனவே இது கண்களுக்கு நல்ல பலனளிக்கிறது. மேலும் சப்போட்டா பழத்தில் உள்ள விட்டமின் ஏ, ஈ மற்றும் பி ஆகியவை சருமத்தை பாதுகாக்கிறது.

அதேபோல் சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

Sappota fruit

சப்போட்டா பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. குறிப்பாக சப்போட்டா பழம் சாப்பிடுவதால் இரைப்பை உடல் புற்றுநோயை வராமல் தடுக்கிறது.

குறிப்பாக சப்போட்டா பழம் சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதேபோல் சிறுநீரக கற்களை அகற்றுவதில் சப்போட்டா பழம் நல்ல பலன் அளிக்கிறது.

Sappota fruit

முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கும் சப்போட்டா பழம் நல்ல பலன் அளிக்கிறது. குறிப்பாக தூக்கமின்மை மற்றும் பதட்டம் உள்ளவர்கள் சப்போட்டா பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

சப்போட்டா பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.