குங்குமப் பூவில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.. என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.!

பொதுவாக குங்குமப்பூ என்பது குழந்தைகள் சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக பிறக்கும் முன்பு கர்ப்பிணியான பெண்களுக்கு பாலில் கலந்து கொடுக்கும் வழக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
ஆனால் இது மூடநம்பிக்கையே. குங்குமப்பூவில் தோலின் நிறத்தை மாற்றும் தன்மை இல்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குங்குமப்பூவில் மற்ற சில நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்று கூறுகின்றனர்.
அதாவது, வயதான பாட்டிமார்கள் வெற்றிலை, பாக்கு போடும் வழக்கத்தை அடிக்கடி பார்த்திருப்போம். அவ்வாறு வெற்றிலை, பாக்கு போடும்போது குங்குமப்பூவும் சேர்த்துக் கொண்டால் பசியுணர்வு அதிகமாக்கும். மேலும் ஜீரணத்திற்கும் உபயோகமாக இருக்கும்.
தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தில் இருப்பவர்களும் பாலில் குங்குமப்பூவை கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும். இதனால் மன அழுத்தமும் குறையும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.