புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட கூடாது, ஏன் தெரியுமா ? விரதத்தையும் தாண்டி மறைந்திருக்கும் உண்மைகள் .!

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட கூடாது, ஏன் தெரியுமா ? விரதத்தையும் தாண்டி மறைந்திருக்கும் உண்மைகள் .!



fasting-in-puratasi-without-non-veg

பொதுவாக பெரும்பாலான இந்து சமயத்தினர் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, முழு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி. கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் வடிவம். அதனால் புரட்டாசி  மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் எனவே அசைவம் சாப்பிடக்கூடாது.
 

எனவே அன்று பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என அன்று தொட்டு சாஸ்திரங்கள் கூறி வருகின்றனர் . 

Non veg

ஆனால் பூமியின் இயக்கத்தின்படி புரட்டாசி மாதத்தில் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல  மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். 
இதனால், அந்த மாதத்தை சூட்டை  கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள். 

இந்த காலங்களில் அசைவம் உடம்பிற்கு ஆகாது. இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம்  சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். 

 Non veg

மேலும் செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் அப்படியே தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்த்து  , உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்க கூறியுள்ளனர் . 

 மேலும் இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும்  வழக்கத்தை ஏற்படுத்தினர்.