தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அச்சோ.. டாட்டூ் குத்தும்போது இதெல்லாம் கவனிக்கலைனா அவ்ளோதான்.. எச்ஐவி வரும் அபாயம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

தற்போதைய காலகட்டத்தில் டாட்டூ குத்திக்கொள்ளுதல் என்பது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. உடலில் தனக்கு பிடித்த டிசைன் மற்றும் கலரில் மையிட்டுக்கொள்வதில் வலியுடன் கூடுதல் கவனமும் தேவைப்படுகிறது.
ஆனால் டாட்டூ குத்துவதற்கு முன் உடலில் எங்கு குத்த போகின்றோம் என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். உடலில் டாட்டூ குத்துதல் மற்றும் பிற காஸ்மெட்டிக் சிகிச்சைகளை மேற்கொள்வதில் பல சிக்கல்களும் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்தையும்விட ஆபத்தானது டாட்டூ குத்தி கொள்வது. குறிப்பாக உடலின் சில பகுதிகளில் டாட்டு குத்துவது மிகவும் ஆபத்து என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்திகொள்வது ஆபத்தானது?
பிறப்புறுப்பு மற்றும் உள்உதடுகளில் டாட்டூ் குத்தவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அப்படிசெய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
மேலும் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், பல் ஈறுகள், நாக்கு உள்ளிட்டவையில் டாட்டூ் குத்துவதால் அதன் வலி குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்றும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு.
உடலில் நம் குத்திக் கொள்ளும் டாட்டூ தவறாகிபோவதை எப்படி தெரிந்து கொள்வது?
★டாட்டூவை சுற்றி சிவந்து போதல்,
★டாட்டூ குத்திய இடத்தில் அதீத வலி ஏற்படுதல்,
★குறிப்பிட்ட பகுதியில் ஆர்ட்டிஸ்ட் அதிகமாக மை இடுதல்,
★டாட்டூ குத்திய இடத்தில் சீழ் வடிதல்,
★டாட்டூ குத்திய இடம் அதிக சூடாக இருப்பது மற்றும் துடிப்பது போன்ற வலி இருத்தல்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பாதிக்கப்பட்ட இடத்தில் ஆன்டிபயாட்டிக் தடவவேண்டும். இல்லையெனில் உடல்நலகுறைபாடு ஏற்படும் என்றம் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் குத்தும்போது அந்த ஊசி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா? என்பதை உறுதி செய்வதும் அவசியம். இதன் மூலம் எச்ஐவி போன்ற மோசமான தொற்றுகள் எளிதில் பரவுவதை தடுக்க இயலும்.