இந்தியா லைப் ஸ்டைல்

பணியிலிருந்து நீக்கிய மேனேஜரை பழிவாங்கிய முன்னாள் உழியர்! டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பயங்கரம்

Summary:

Ex employee shot senior manager in tata steel

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியில் இருந்த சீனியர் மேனேஜரை முன்னால் ஊழியர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஹரியானாவில் இயங்கி வரும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துனை நிறுவனமான TSPDLல் சீனியர் மேனேஜராக அரிந்தம் பால் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். நேற்று மதியம் சரியாக 1:10 மணியளவில் பணியில் இருந்த பாலை அதே நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் விஷ்வாஸ் பாண்டே என்பவர் தீடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். 

குண்டடிப்பட்ட பாலை சக ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாலின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர். முதல்கட்ட விசாரணையில் பாலை சுட்ட முன்னாள் ஊழியர் விஷ்வாஸ் பாண்டே (32) கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆகஸ்ட் மாதம் வரை அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், சீனியர் மேனேஜர் பாலினால் தீடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

தன்னை பணியிலிருந்து நீக்கிய மேனேஜரை பழிவாங்குவதற்காகவே பாண்டே அவரை கொலை செய்திருக்கலாம் என காவலதுறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள பாண்டேவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement