தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால் போதுமா.!? உலர் திராட்சையின் அற்புத நன்மைகள் இதோ.!
உலர்திராட்சையில் அதிக அளவு நன்மைகள் உள்ளன. இதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியேவும் சாப்பிடலாம். இதில் தாமிரச்சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினசரி எடுத்துக் கொண்டால் நோய் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தில் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
உலர் திராட்சைப் பழத்தை ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இந்த பழத்தை 50-60 எடுத்துப் பசும் பாலில் காய்ச்சி ஆற வைத்து பின் பழத்தை சாப்பிட்டு, பாலையும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். குழந்தைகளுக்கும் இதேபோல் பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்க வைத்தால் குழந்தை திடமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்த் திராட்சையை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறு மற்றும் இதய நோய் தீர இந்தப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
உலர்ந்த திராட்சைப் பழத்தை 20 எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டால் எலும்பு மச்ஜைகள் வலுபெறும் மற்றும் இரத்தம் அதிகரிக்கும். இந்த பழத்தை பெருஞ்சீரகத்தோடு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி சரியாகி, புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் இடுப்பு வலி, குடல் புண், தலைவலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உலர்த் திராட்சைப் பழம் விளங்குகிறது.