சாப்பிட்டவுடன் இந்த விஷயங்களை கண்டிப்பாக மறந்தும் கூட செய்யாதீங்க.! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.!?



Dont do these things after eating foods

பொதுவாக பலரும் உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் பல பழக்கங்களை செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்டு முடித்த பிறகு டீ, காபி குடிப்பது அல்லது புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கும். இதன்படி உணவு சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு சிலர் மதிய நேரத்தில் நன்றாக தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இது நம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதைக் குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

foods

சாப்பிட்ட

பிறகு தூங்கும் பழக்கம்

பொதுவாக மதிய நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ சாப்பிட்டு முடித்த உடனே தூங்குவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நாம் பலரும் அறிந்ததே. உணவு சாப்பிட்ட உடனே தூங்குவதால் நம் உடலில் உள்ள உறுப்புகள் ஓய்வு நிலையை அடைவதால் நாம் உண்ட உணவு செரிமானம் ஆகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

இதையும் படிங்க: இதை தெரிஞ்சுக்கோங்க.! தயிரில் வெள்ளரிக்காய் விதை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.!?

சாப்பிட்டபிறகு

புகைபிடிப்பது - ஒரு சில ஆண்கள் சாப்பிட்ட உடனே புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சாதாரண நேரத்தில் புகைப்பிடிப்பதை விட சாப்பிட்ட பிறகு ஒரு சிகரெட் அடிப்பது 10 சிகரெட் அடித்ததற்கு சமம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

சாப்பிட்டவுடன்

குளிப்பது - பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு குளிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகாமல் இருக்கும். குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக குளிக்க கூடாது.foods

சாப்பிட்ட

பிறகு பழங்கள் சாப்பிடுவது - உணவு உண்ட பிறகு பழங்கள் சாப்பிடும் போது செரிமானம் செய்வதற்கு ஒரு சில அமிலங்களை சுரப்பதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுவதோடு, கல்லீரலில் பிரச்சனை உண்டாகும். எனவே சாப்பிட்ட பிறகு மேலே குறிப்பிட்ட செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த மூலிகைகளை கொதிக்க வைத்து குடித்து பாருங்கள்.? நிமிடத்தில் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறிவிடும்.!?