"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
நீரிழிவு, பித்த நோயை கட்டுப்படுத்தும் பேரீச்சம்பழ பாயாசம்..! வீட்டிலேயே செய்வது எப்படி?..!
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் எப்படி செய்வது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.
பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் மூலமாக பித்த சம்பந்தமான நோய் மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன் பேரீச்சம்பழம் மலச்சிக்கலை முழுவதுமாக போக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள் :
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி மற்றும் பாதாம் - 10
பால் - 2½ கப்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 20
செய்முறை :
★முதலில் பேரிச்சம் பழத்தை நன்றாக கழுவி, ½ கப் பாலில் ஊற வைக்க வேண்டும்.
★ பின் அரை மணி நேரத்திற்கு பழத்தை ஊற வைத்த பாலை சேர்த்து, பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
★அடுத்து 2 கப் பாலை அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சுண்டும் அளவிற்கு காய்ச்சி கொள்ள வேண்டும்.
★தொடர்ந்து அரைத்த பேரீச்சை கலவையை காய்ச்சிய பாலில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
★இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரி, பாதாம் சேர்த்து, சர்க்கரை சேர்த்து இறக்கினால் சூப்பரான பேரிச்சம்பழ பாயாசம் தயாராகிவிடும்.