வீட்டில் காய் ஏதும் இல்லையா..? கவலையே வேண்டாம் சுவையான டேஸ்டியான மல்லிக் குழம்பு..!

வீட்டில் காய் ஏதும் இல்லையா..? கவலையே வேண்டாம் சுவையான டேஸ்டியான மல்லிக் குழம்பு..!


Coriander gravy

வீட்டில் காய் ஏதும் இல்லையா?. கவலையே வேண்டாம்; சுவையான டேஸ்டியான மல்லி குழம்பு..!

மாதக்கடைசியில் வீட்டில் காய்கறி இல்லையே, என்ன குழம்பு செய்யலாம் என விழிபிதுங்கும் ஒவ்வொருவருக்கும் இந்த செய்தி சமர்ப்பணம்.

தேவையான பொருட்கள்: 

கொத்தமல்லி விதை - 5 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 8,

மிளகு - ஒரு ஸ்பூன்,

சீரகம் - ஒரு ஸ்பூன்,

பூண்டு - 10 பல், 

கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு, 

வெந்தயம் - சிறிதளவு, 

உப்பு - தேவையான அளவு,

நல்லெண்ணெய் - தேவையான அளவு, 

கடுகு - சிறிதளவு.

செய்முறை:

ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். 

மல்லி குழம்பு-coriander gravy

இது அனைத்தையும் ஆற வைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, அதனுடன் புளி ஒரு பெரிய லெமன் சைஸ் எடுத்து சிறிது நேரம் ஊற வைத்து, புளியும் சேர்த்து மிக்ஸியில் மசாலாவுடன் அரைத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஆறு ஸ்பூன் விட்டு, அதில் கடுகு, வெந்தயம், சிறிதளவு மிளகு சேர்த்து, கடுகு வெடித்த உடன் நாம் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட்டை, அதில் போட்டு நன்றாக கிளறவும். 

இப்பொழுது அரை ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து, தண்ணீர் அரை டம்ளர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் மேலே பிரிந்து வரும் அளவு வேகவிடவும். 

இறுதியில் சிறிதளவு வெல்லத்தை போட்டு கிளறி, சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான கொத்தமல்லி குழம்பு தயார். இதை சாதத்திற்கு, இட்லி தோசைக்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.