அதிகரித்துவரும் செல்போன் திருட்டு.! மக்களே உஷார்.! இந்த இடத்துல மட்டும் செல்போனை வச்சுடாதீங்க.!

அதிகரித்துவரும் செல்போன் திருட்டு.! மக்களே உஷார்.! இந்த இடத்துல மட்டும் செல்போனை வச்சுடாதீங்க.!



cell-phone-theft-increased

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு பலரும் புதிய செல்போன் வாங்குவதற்கு செல்லும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனைப்பயன்படுத்திக்கொண்டு தான் தற்போது செல்போன் திருட்டு அதிகம் நடக்கிறது.

அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது செல்போனை நாம் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே பறித்துக்கொண்டு செல்கின்றனர். நமது செல்போனை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது நம்மிடம் பிடுங்கி வாகனத்தில் பறந்துசெல்லும்பொழுது நம்மால் என்ன செய்யமுடியும். வீதிக்கு வீதி சிசிடிவி கேமராக்கள் வந்தவுடன் செல்போன் திருட்டு சற்று குறைந்துள்ளது.

cell phone

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நம்முடைய மொத்த தகவலும் புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு உட்பட பல தகவல்கள் செல்போனில் தான் வைத்திருப்போம். திருடர்கள் நமது செல்போனை திருடாதவாறு நமது செல்போனை முன் பக்க பாக்கெட்டில் வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்கும். அதேபோல் ட்ரவுசர் அணிதிருப்பவர்கள் ஜிப் பாக்கெட் உள்ள ட்ரவுசரை அணிந்து செல்போனை பாக்கெட்டிற்குள் வைத்து ஜிப்பை மூடிவைப்பது பாதுகாப்பானது.  செல்போன் திருடுபோனால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள். செல்போனை ஸ்டெயிலுக்காக பின் பாக்கெட்டில் வைத்தால் திருடர்கள் எடுத்துச்செல்வதற்கு நாமே இடம் கொடுத்தது போல் ஆகிவிடும்.