சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என்று கூற இதுதான் காரணமா.?!

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என்று கூற இதுதான் காரணமா.?!



can-you-drink-water-after-eating

உணவை சாப்பிட்டவுடன், உறங்குவதற்கு ஆயத்தமாக கூடாது. அப்படி உறங்கச் சென்றால், குடல் செயல்பாடு நடைபெறுவது மிகவும் சிரமம். ஜீரணமாவதில் பிரச்சனை ஏற்படலாம். உணவை சாப்பிட்டவுடன், தண்ணீரை குடிக்க கூடாது. அப்படி  குடித்தால், ஜீரணநீர், நீர் சத்து போய் அஜீரணமாக மாறிவிடும். இதன் காரணமாக, பல்வேறு நோய்கள் வரலாம்.

சுமார் 40 நிமிடங்கள் சென்ற பிறகு தண்ணீர் தாகம் எடுக்கும். அப்போதுதான் தண்ணீர் பருக வேண்டும். குறைந்தபட்சம் 1 மணி நேரம் சென்ற பிறகுதான் உறங்க ஆயத்தமாக வேண்டும். இது மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பவர்களுக்கும் பொருந்தும்.

அதேபோல உணவு சாப்பிட்டவுடன் குளிக்கவும் கூடாது. அப்படி குளித்தால், கால் மற்றும் கைகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆகவே உணவு செரிப்பதற்கான இரத்த ஓட்டம் குறைந்து, வயிற்றில் இருக்கின்ற உணவின் செரிமானத்தையும் குறைத்து விடும்.

Tamil Health Tips

உணவு சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பழங்களையும் உட்கொள்ளக்கூடாது. அப்படி சாப்பிட்டால், உணவு செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். உணவு ஜீரணமாக 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். பழங்களின் ஜீரண நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த நேர வித்தியாசம் காரணமாக, நாம் உட்கொண்ட பழம் வாயுவாக மாற்றமடையும். இதில் ஒரே ஒரு பழம் மட்டும் தனித்துவமானது. அது பேரிச்சம்பழம் என்று கூறப்படுகிறது

முதலில் நாம் உட்கொண்ட உணவுகள் ஜீரணமாகவில்லையென்றால், வேறு உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமாவதில் கடும் சிக்கல் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர், குளிர்பானங்கள் போன்ற திரவப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், உணவு ஜீரணமாகாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த உணவு ஜீரணமாக குறிப்பிட்ட அளவு நம்முடைய குடலில் வெப்பம் இருக்க வேண்டும்.

Tamil Health Tips

அதேபோல உணவு சாப்பிட்டவுடன் நடப்பதோ, மிகவும் கனமான பொருளை தூக்குவதோ, பரபரப்பாக செயல்படுவதோ கூடாது. அப்படி செய்தால், நாம் சாப்பிட்ட உணவுகள் கீழ்நோக்கி செல்லாமல், மேல் நோக்கி தான் வரும். இதனால் நெஞ்செரிச்சல், வாய் தொல்லைகள் போன்றவை உண்டாகலாம்.

உணவை சாப்பிட்டவுடன், இடுப்பில் இருக்கக்கூடிய பெல்டைப் பலர் இறக்கி விடுவார்கள், இல்லையென்றால், தளர்த்தி விடுவார்கள். இப்படி செய்வதால், சாப்பிட்ட உணவுகள் உடனடியாக குடலுக்குள்  சென்று விழுந்துவிடும். ஆகவே இதன் காரணமாக, செரிமான கோளாறு உண்டாகலாம்.