வாவ்..என்னா ருசி.. சுவையான பிரட் உப்புமா செய்வது எப்படி..இதோ அருமையான டிப்ஸ்!!

வாவ்..என்னா ருசி.. சுவையான பிரட் உப்புமா செய்வது எப்படி..இதோ அருமையான டிப்ஸ்!!


Bread uppuma recipe

பொதுவாக ரவ்வாவில் செய்யும் உப்புமா, இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு வித்தியாசமான முறையில் பிரட் உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 8, 
கடுகு – கால் டீஸ்பூன், 
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, – ஒரு கொத்து, 
பெரிய வெங்காயம் – 1, 
தக்காளி – 1, 
பச்சை மிளகாய் – 2, 
கொத்தமல்லித் தழை – சிறிதளவு, 
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு.

முதலில் பிரட் துண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு பொரிய விட வேண்டும்.

Bread uppuma

அதன்பின் அதில் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

இவை லேசாக வதங்கியதும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.தக்காளி மசிய வதங்கியதும் தேவையான அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்குங்கள். நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

மசாலாவுடன் பிரட் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து வர வதக்கி விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் எல்லாமே ஒன்றுடன் ஒன்றாக கலந்து சுவையான பிரட் உப்புமா தயாராகி விடும்.கடைசியாக கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்க்க வேண்டியது தான்.