இரும்புசத்து, நார்சத்து கொண்ட கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி?..!

இரும்புசத்து, நார்சத்து கொண்ட கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி?..!


black-dhal-adai-recipe-for-good-health

பலவகையான சத்துக்கள் அடங்கிய கருப்பு உளுந்து அடை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.

கருப்பு உளுந்தில் அதிகமாக இரும்புசத்து மற்றும் நார்சத்து இருக்கின்றது. இதனை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலமாக ரத்தசோகை நோயிலிருந்து விரைவில் விடுபடலாம். மேலும், உடல் மெலிந்து இருக்கும் அனைவரும் இதனை சாப்பிடுவதன் மூலமாக பருமன் அடைய முடியும்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி,கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
அரிசி - 1 கைப்பிடி
கருப்பு உளுந்து - 1/4 கிலோ

செய்முறை :

★முதலில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

★பின் அரிசியை 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

★தொடர்ந்து தோல் நீக்காத கருப்பு உளுந்தை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

★அடுத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை கலந்து, அரைத்த மாவில் கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசைய வேண்டும்.

★இறுதியாக மாவை சிறிது எடுத்து அடை போல் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பிறகு எடுத்தால் சூடான, சுவையான அடை தயார் ஆகிவிடும்.