லீவ்டே ஸ்பெசல்: சுவையான வாழைக்காய் பக்கோடா வீட்டிலேயே செய்வது எப்படி??..!
பொதுவாக நமது வீட்டில் வெங்காய பக்கோடா, பாகற்காய் பக்கோடா, மற்றும் மெதுபக்கோடா ஆகியவற்றை சாப்பிட்டிருப்போம். ஆனால், வீட்டிலேயே சுவையான வாழைக்காய் பக்கோடா எவ்வாறு சமைப்பது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கேற்ப
மோர் - 1 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
சோள மாவு - 1 தேக்கரண்டிசெய்முறை :
★முதலில் வாழைப்பூவை முழுவதுமாக சுத்தப்படுத்தி, பொடி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின் அதனை மோரில் போட்டு அலசி எடுக்க வேண்டும்.
★அடுத்து அதனுடன் சோள மாவு, கடலை மாவு, வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.
★இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் நாம் பிசைந்து வைத்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் சூப்பரான சுவையான வாழைப்பூ பக்கோடா ரெடியாகி விடும்.