இடி சத்தம் கேட்டதும் அர்ஜுனா மந்திரம் சொல்வது எதனால்?.. உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.!Archuna Word During Lightning Thunder 

 

மழை என்றால் பலருக்கும் பிடிக்கும். மழை பெய்து கொண்டிருக்கும் போதே, இடியும் உருவாகும். புவியை மின்னல் தாக்கும் முன்னர் மேகத்திற்கும் புவிக்கும் இடையேயான சில வினாடிப் பயணம் அதிக வெப்ப நிலையில் உள்ள மின்னல் கீற்று காற்று மூலக்கூறுகளை வெப்பமாக்கும். 

இந்த காற்று வெப்பமாகும் போது விரிவடையும் இந்த சத்தமே இடி என்று அழைக்கப்படுகிறது. இடி இடிக்கும் நேரத்தில் அதிக சத்தத்தால் நமது வீட்டு குழந்தைகள் பயம் கொள்வார்கள், நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அப்போது அர்ஜுனா என்று சொல்ல சொல்லி இருப்பார்கள். 

Latest news

அர்ஜுனன் என்ற கிருஷ்ண பக்தனின் பெயரை இடி கேட்கும்போது கூறினால் அது பயந்து தூரத்திற்கு செல்லும் என்றும் கூறுவார்கள். ஆனால், அர்ஜுனா என்று சொல்வதற்கு பின் அறிவியல் காரணம் இருக்கிறது. பலமாக இடி ஏற்படும் போது அதிலிருந்து வரும் சத்தத்தால் காதுகள் அடைத்து கொள்ள வாய்ப்புள்ளது. 

அந்த நேரத்தில் அர்ஜுனா என்று கூறும் போது, நமது காதுகள் அடைக்காது. அர் என்று சொல்லும்போது நாக்கு மடிந்து மேல் தாடையை தொடும். ஜூ என்பது வாய் குவிந்து காற்று வெளியேற்றப்படும். னா என்பது வாய் முழுமையாக திறந்து காற்று வெளியே செல்கிறது. இதனால் காது அடைக்காது.