உல்லாசமாக இருந்தபோது இறந்தது உண்மையா? ஆலங்குடி கஸ்தூரி கொலையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உல்லாசமாக இருந்தபோது இறந்தது உண்மையா? ஆலங்குடி கஸ்தூரி கொலையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!



alangudi kasthuri murder case

சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த செய்தி தீயாய் பரவியது. தைலமரம் தோப்பில் தன்னுடன் உல்லாசமாக இருந்தபோது அந்த பெண் இறந்துவிட்டதாக காதலன் நாகராஜ் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்திருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குலமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகள் கஸ்தூரி (வயது 19) என்பவர் ஆலங்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வேலை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி காவல் துறையினர், மழையூர் அருகேயுள்ள அதிரான்விடுதியை சேர்ந்த கருப்பையா மகன் நாகராஜ் (27) என்பவரை கைது செய்தனர்.

alangudi kasthuri murder case

முதல் கட்ட விசாரணையில், ஆலங்குடி ஆண்டிகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாகராஜ், கஸ்தூரி வேலை பார்த்து வந்த மருந்துக்கடைக்கு எதிரில் சரக்கு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அப்போது கஸ்தூரிக்கும் நாகராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ஆதனக்கோட்டை சாலையில் உள்ள தைல மர காட்டில் இருவரும் தனிமையில் இருக்கும்போது கஸ்தூரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரியவந்தது.

இதனால் பதறிய நாகராஜ் கஸ்தூரியின் உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி, சரக்கு ஆட்டோவில் ஏற்றி தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் பாப்பான்கன்னி ஆற்றில் போட்டுள்ளார். அதன்பின் அவர் சென்னைக்கு தப்பித்து செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆலங்குடி காவல்துறையினர் மல்லிப்பட்டினத்தில் உள்ள பாப்பான்கன்னி ஆற்றுக்கு சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

alangudi kasthuri murder case

இதற்கிடையே கஸ்தூரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நாகராஜிடம் மீண்டும் விசாரணையை துவங்கினர் அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அப்போது அவர்,

"நானும், கஸ்தூரியும் ஆண்டிகுளத்தில் உள்ள எனது உறவினர் வீட்டில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் எனது பாட்டி எனக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்திருப்பதாக கஸ்தூரியிடம் கூறினேன். இதைக்கேட்டதும் கஸ்தூரி, தன்னை ஏமாற்றிவிட்டதாக என்னிடம் சண்டை போட்டார். உடனே நான் கஸ்தூரியை கீழே தள்ளிவிட்டேன். இதில் சுவரில் மோதி, பின்பக்க தலையில் பலமாக அடிபட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் அவரது உடலை மறைத்து எடுத்துச்சென்று ஆற்றில் வீசினேன்" என்று நாகராஜ் கூறினார்.

alangudi kasthuri murder case

இதனைத்தொடர்ந்து, ஆலங்குடி காவல் துறையினர் கொலைக்குற்றம், தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கலைநிலா முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

அதன்பின் நாகராஜ் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாகராஜின் உறவினர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.