இந்தியா லைப் ஸ்டைல் டெக்னாலஜி

Uber Eats நிறுவனத்தை விலைக்கு வாங்கியது சோமாடோ நிறுவனம்..! விலை எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா..?

Summary:

Zomato buys Uber Eats Zomato acquires Uber Eats

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான Uber Eats நிறுவனம் மற்றொரு முன்னணி நிறுவனமான சோமாட்டோவுடன் இணைந்துள்ளது.

இன்று நடந்து முடிந்த இந்த ஒப்பந்தத்தில் சோமாடோ நிறுவனம் Uber Eats இந்திய நிறுவனத்தை சுமார் $350 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி சுமார் 2,485 கோடி ஆகும்.

தற்போதைய Uber Eats வாடிக்கையாளர்கள் தங்கள் Uber Eats செயலியை திறந்து உணவு ஆர்டர் செய்ய முற்படும்போது Uber Eats நிறுவனத்தை சோமாடோ வாங்கிவிட்டதாகவும், இனி சோமடோவில் ஆர்டர் செய்துகொள்ளுங்கள் என Uber Eats செயலியில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளது மற்றொரு முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகிக்கு பெரிய போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. 


Advertisement