தற்கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம்.! சிறுவன் கூறிய பகீர் காரணம்!!

தற்கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம்.! சிறுவன் கூறிய பகீர் காரணம்!!


young-man-write-letter-to-president

பீகார் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தற்பொழுது தனது தந்தையுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறார். அவரது தாயார் பாட்னாவில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை ஒரு அரசு ஊழியர். இந்நிலையில் அந்த சிறுவன் குடியரசுதலைவருக்கு அதிர்ச்சியளிக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில் எனது பெற்றோர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது. அதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். மேலும் எனது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் படிப்பில் மோசமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்புகிறேன். எனவே நான் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாருங்கள் என எழுதியுள்ளார்.

suicide

 மேலும் அதில் எனது தாய் தனது சமூக விரோதிகள் மூலம்   புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை தொடர்ந்து மிரட்டி வருகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கடிதத்தை குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பகல்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவலிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

suicide

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டபடி உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது