ஆசைக்கு இணங்க மறுத்த முன்னால் காதலி... ஆசை தீர துண்டு துண்டாக வெட்டிய காதலன்... கொடூர சம்பவம்.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆசைக்கு மறுத்த காதலி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புனித் என்ற இளைஞரும் இளம் பெண் ஒருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரது காதலியான இளம் பெண்ணிற்கும் வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது பழைய காதலியை மறக்க முடியாத அந்த இளைஞர் காதலியுடன் உறவு கொள்வதற்காக அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு அந்த இளம் பெண் மறுக்கவே அவரை கொலை செய்ய முடிவு செய்து தனியாக சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்
இவரை நம்பி வனப் பகுதிக்கு வந்த அந்த பெண்ணை கோடாரியாள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய காதலனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.