
Young man forcing sexual work
ஆந்திராவில் விசியானகரத்தை சேர்ந்த சக்ரதர் என்பவர் தனது மனைவி லீலாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்து வந்ததுள்ளார். இந்த நிலையில் பெண்களை வைத்து ரகசியமாக பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் துணி வியாபாரம் தொடர்பாக சக்ரதர் கொல்கத்தாவுக்கு சென்று நிஷா என்ற பெண்ணுடன் பழகியுள்ளார்.
பின்னர் இருவரும் நட்பான நிலையில் தனக்கு திருமணமாகவில்லை என பொய் கூறியுள்ளார் சக்ரதர்.
இதனையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்விளைவாக நிஷா கர்ப்பமடைந்தார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள சக்ரதர்வை நிஷா வலியுறுத்தினார். அப்போது தான், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், மனைவியுடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும் சக்ரதர் கூறியுள்ளார்.
இதனையடுத்து நிஷாவையும் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த நிஷா காவல்துறையில் புகார் அளித்தார்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் சக்ரதர்மற்றும் அவர் மனைவி லீலாவை கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement