இந்தியா

காதலித்த பெண்ணை தனியாக அழைத்து சென்று புதருக்குள் நடந்த கொடூரம்.! விசாரணயில் சொன்ன அதிர்ச்சி காரணம்.!

Summary:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலன் கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. 19 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகலதாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.

அவர் வங்கிக்கு வேலைக்கு போனதில் இருந்தே, ராஜேஷூடன் சினேகலதா பேசுவது குறைந்து போயுள்ளது. இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற சினேகலதா வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் பெற்றோர் பல இடங்களில் மகளை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், ஒரு புதருக்குள் சினேகலதா சடலமாக கண்டுபிடித்துள்ளனர். அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ராஜேஷ் இடம் இருந்து 1600-க்கும் மேற்பட்ட முறை போன் கால் வந்துள்ளது.

இதையடுத்து ராஜேஷைப் பிடித்து போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நான் ஒரு வருடமாக சினேகலதாவை தீவிரமாக காதலித்து வந்தேன். ஆனால், அவர் திடீரென்று என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது.இதன் காரணமாக சினேகாவை தனியாக அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொன்று புதருக்குள் வீசிவிட்டு, தீ வைத்து கொளுத்தினேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Advertisement