காதலியின் தலையுடன் காவல் நிலையம் வந்த காதலன்... அதிர்ச்சி அடைந்த காவலர்கள்... பதறவைக்கும் சம்பவம்...

கர்நாடக மாநிலம், விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னிபோரய்யனஹட்டியை சேர்ந்த போஜராஜா. இவர் அதே பகுதியை சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தது மட்டுமின்றி நெருக்கமாகும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நிர்மலா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலன் வேறு ஒரு பொண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா காதலனை நேரில் சந்தித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தங்கள் காதல் விவகாரம், நெருக்கமான புகைப்படங்களையும் அவரது மனைவியிடம் சொல்லி விடுவதாக போஜராஜாவை மிரட்டியுள்ளார். இதனால் கோபமான போஜ ராஜா அரிவாளுடன் நிர்மலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது தான் கொண்டுவந்த அரிவாளை எடுத்து நிர்மலாவின் கழுத்தை அறுத்து உள்ளார். ஆனால் ஆத்திரம் தீராததை அடுத்து நிர்மலாவின் தலையை தனியாக துண்டித்து எடுத்தார். பின்னர் காதலியின் தலையுடன் கானஹொசஹள்ளி காவல் நிலையத்துக்கு சென்றார்.
இதனை பார்த்து அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். போஜராஜாவை கைது செய்த காவல்துறையினர் நிர்மலாவின் தலையை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.