பசியில் துடிப்பவர்களுக்காக 6.2 லட்சம் நிதி திரட்டிய 11 வயது சிறுமி..! அனைவரையும் நெகிழவைக்கும் சம்பவம்.!



young-girl-collected-6-lakhs-through-crowd-funding-to-p

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது.

இதன் ஒருபகுதியாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் பலரும் நிதி உதவி செய்துவருகின்றனர்.

corono

இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த 11 வயதுச் சிறுமி ரித்தி என்பவர் ஏழை எளியோருக்கு உணவு வழங்குவதற்காக நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்களிடம் சுமார் ஆறு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் நிதியாக திரட்டியுள்ளார்.

தான் திரட்டியுள்ள நிதி மூலம், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ உப்பு, ஒரு லிட்டர் எண்ணெய், சோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட தொகுப்பை ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கியுள்ளார். சிறுமியின் இந்த செயலை இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.