இந்தியா

காலைக் கடன் முடிப்பதற்காக வயல்வெளிக்கு சென்ற சிறுமி.! கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூரர்கள்.!

Summary:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ம

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.

இந்தநிலையில், உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பதோகர் கிராமத்தைச் சேர்ந்த மைனர் சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமையன்று மர்ம நபர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிறுமி அதிகாலையில் காலைக் கடனை முடிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றிருக்கிறார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி மயக்கமடைந்ததால் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement