திடீரென சிறுவன், சிறுமியை தாக்க வந்த நாய்கள் கூட்டம்.! தலைதெறிக்க ஓடிய சிறுமி.! ஆனால் அந்த சிறுவன் செய்த செயலை பார்த்தீர்களா.! வைரல் வீடியோ.!young-boy-fight-with-dogs

என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் நாய்களுக்கு பயப்படுவது பொதுவான பயங்களில் ஒன்று. தெரு நாய்கள் நகரம் மற்றும் கிராமவாசிகளுக்கு இடையூறாக இருக்கும், ஏனென்றால் எந்த முற்றத்திலும் நாய்கள் கூட்டமாகவே திரியும். அதிலும் இரவு நேரத்தில் தெரு முற்றத்தில் நிற்கும் நாய்கள் தனி ஆளாக ஒருவர் வந்தால் அவர்களை ரவுண்டு கட்டி குரைக்கும்.

தனியாக நிற்கும் நாயை பார்த்தாலே பலருக்கும் பயம் வரும். நாய் நம்மை தாக்குவதற்கு வந்தால் பலரும் பயந்து ஓடுவார்கள். அவ்வாறு ஓடும்பொழுது தான் நாய் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடிக்க முயற்சி செய்யும். அதுவே நாம் அதனை தாக்காமல், தாக்குவது போன்று பாவனை செய்தால் கண்டுகொள்ளாமல் போய்விடும்.

ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுவனும், சிறுமியும் கைகோர்த்துக்கொண்டு வரும்பொழுது திடீரென பல நாய்கள் அவர்களை தாக்க முயற்சிக்கின்றன. அதனை பார்த்த சிறுமி திரும்பி பார்க்காமல் ஓடிவிடுகிறார். அப்போது அங்கிருந்த நாய்கள் அந்த சிறுவனை ரவுண்டு கட்டி குரைக்கின்றது. ஆனால் அந்த சிறுவன் கொஞ்சம் கூட அசராமல் அங்கிருந்த நான்கு நாய்களையும் அசால்ட்டாக சமாளிக்கின்றான். 

ஒருவேளை அந்த சிறுவனும் ஓடியிருந்தால் அந்த நாய்கள் கண்டிப்பாக சிறுவனை தாக்கியிருக்கும். ஆனால் அந்த சிறுவன் சிங்கம்போல எதிர்த்து நின்று விரட்டுகிறான். சிறுவனின் துணிவிற்கு பயந்த நாய்கள் அங்கிருந்து தப்பி ஓடுகின்றன. இந்த வீடியோ இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் துணிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.