மீண்டும் ஒரு பரிதாபம்.! ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை.! மீட்புப்பணிகள் தீவிரம்.!

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.


young-boy-fall-down-in-bore

உத்திரபிரதேச மாநிலம்  மெஹாபா மாவட்டம் குல்பஹார் பகுதியில் வசிப்பவர் பஹிராத். இவருக்கு நான்கு வயதில் தனேந்திரா என்ற மகன் இருந்துள்ளான். இந்தநிலையில்,  பஹிராத் தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மகனுடன் விவசாயம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த தனேந்திரா, வயல் வெளியில் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் போர்வெல் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

உடனடியாக சிறுவனின் தந்தை அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.