தீயில் சிக்கிக்கொண்டவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றிய இளைஞன்!! குவிந்துவரும் பாராட்டுகள்!!

தீயில் சிக்கிக்கொண்டவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றிய இளைஞன்!! குவிந்துவரும் பாராட்டுகள்!!


yong man saved people


சூரத்தில் நேற்று மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். சூரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், கட்டடத்தில் இருந்து குதித்த 15 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.   

இது குறித்து சூரத் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், 3ஆவது மாடியில் இயங்கி வந்த கல்வி பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர்.  அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள 3ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த தீ விபத்தினைக் கண்ட அங்கிருந்த இளைஞர், உடனடியாக அருகில் இருந்த ஏணியை பயன்படுத்தி அங்கிருந்த 20-பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவர் பலரை காப்பாற்றிய பின்பு தான் தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர் என்று அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.