உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவுலயா.. எங்கு தெரியுமா?

world big cricket ground india in gujarath


world big cricket ground india in gujarath

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் உள்ள குஜராத்தில்  அமைக்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகளில் தேசிய விளையாட்டாக கிரிக்கெட் விளங்கும் நாடுகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மைதானம்தான் உலகிலேயே பெரிய மைதானமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது அதைவிட பெரிய மைதானம் இந்தியாவில் அமைய உள்ளது. 

gujarat

மேலும், உலகிலேயே அதிகமான சர்வதேச போட்டிகளை நடத்தும் மைதானம் (52 ) இந்தியாவில் தான் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இங்கிலாந்தில் (23 ) மைதானம் உள்ளது குறிப்பிடத்தக்கது 

இது குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, “உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை  கண்டுகளிக்க வசதி இருக்கும்.  

அகமதாபாத் நகரில் மொடீரா பகுதியில் 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தின் கட்டுமான பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3,000 கார்கள், 10 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு பார்க்கிங் வசதி இருக்கும். ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் மைதானத்துக்குள்ளே அமைக்கப்படுகிறது.

இந்த மைதானம் பயன்பாட்டிற்கு வரும் போது இந்தியாவை பெருமைப்படுத்தும். நாட்டின் பெருமைக்குரிய சின்னமாக மாறும்.” என பரிமள் நாத்வானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .