இந்தியா Covid-19 Corono+

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு இந்த வேலைகளை தொடர மத்திய அரசு அனுமதி.! சற்று மகிழ்ச்சியில் மக்கள்.

Summary:

Works can continue after april 20 during lock down

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 20 க்கு பிறகு ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் கொண்டுவரப்படும் என பிரதமர் கூறியதை அடுத்து, அதற்கான விதிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒருசில துறைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் பணியை தொடரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் இதோ.

1 . தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள் மற்றும் மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2 . விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில் மற்றும் விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.

3 . மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள் மற்றும் இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.

4 . 100 வேலை திட்டத்தில் மக்கள் தங்கள் பணிகளை தொடரலாம்.

5 . எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மோட்டார் மெக்கானிக் ஆகியோர் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6 . சிறு குறு தொழில் செய்வோர் தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலை செய்யும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் எனவும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement