கரணம் தப்பினால் மரணம்..! கைக்குழந்தையுடன் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு இடையே பயணம் செய்யும் பெண்.! பதறவைக்கும் வீடியோ.!



Women with baby in between running train compartments video

பெண் ஒருவர் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே கைக்குழந்தையுடன் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்றவர்கள் நடந்தும், சைக்கிள், லாரிகள் மூலமாகவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில தொழிலார்களுக்காக அரசு சிறப்பு ரயில்களை இயக்கிருக்கிறது.

இந்நிலையில், பெண் ஒருவர் ஊரடங்கு காரணமாக தனது கைக்குழந்தையுடன் ரயிலில் மிகவும் ஆபத்தாக பயணிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால், அந்த வீடியோ கடந்த சில வருடங்களுக்கு முன்பே வெளிவந்ததும், அந்த வீடியோவை பார்த்தால் அது இந்தியாவில் ஓடும் ரயில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே கைக்குழந்தையுடன் மிகவும் ஆபாயகரமாக பயணம் செய்யும் அந்த பெண்ணை திட்டுவதா? அல்லது குழந்தையுடன் அவ்வளவு ஆபத்தாக பயணம் செய்வதை நினைத்து வருத்தப்படுவதா என தெரியாமல் உள்ளனர் நெட்டிசன்ஸ்.