வலுக்கட்டாயமாக போலீசாரின் காலை பிடித்து ஜீப்பில் எறிய பெண்கள்... வைரலாகும் வீடியோ..!!

வலுக்கட்டாயமாக போலீசாரின் காலை பிடித்து ஜீப்பில் எறிய பெண்கள்... வைரலாகும் வீடியோ..!!


Women who forcefully grabbed the leg of the policeman and threw him into the jeep... The video is going viral..

மத்திய பிரதேசம் மொரேனா பகுதியில் சாஹேப் சிங் என்பவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் சென்றனர். 

மத்திய பிரதேசத்தில் உள்ள  மொரேனாவில் காவல்துறையினர் பெண்களை ஜீப்பில் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி, இந்த சம்பவம் பாரி கா புரா கிராமத்தில் நடந்துள்ளது.

மொரேனா பகுதியில் உள்ள கிராமத்தில் சாஹேப் சிங் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். ஆனால் கிராமத்தில் உள்ள பெண்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டிற்குள் இருந்த சாஹேப் சிங்கை காவல்துறையினர் வெளியே அழைத்தனர். அப்போது, அவரது தாய் வந்து காவல்துறையினரிடம் சண்டை போட்டார். 

சாஹேப் சிங் அந்த இடத்தை விட்டு ஓடும் வரை சாஹேப் சிங்கின் தாய் காவல் துறை அதிகாரிகளின் கால்களை பிடித்து கொண்டார். அப்போது மற்றொரு பெண்ணும் இரண்டு ஆண்களும் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் காவல்துறையினரின் காலை பிடித்து கொண்டு வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏறினர்.