கொரோனா வைரஸ்க்கு இந்தியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை! இந்திய பெண் விஞ்ஞானி வெளியிட்ட அதிரடி தகவல்!

கொரோனா வைரஸ்க்கு இந்தியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை! இந்திய பெண் விஞ்ஞானி வெளியிட்ட அதிரடி தகவல்!



women scientist talk about corono virus

வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி பேராசிரியையும், இந்திய முன்னணி ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான ககன்தீப் காங் கொரோனா குறித்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து இந்தியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. இந்த நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்தில் நான்கு பேர், தாங்களாகவே குணமடைந்துவிடுவார்கள்.  மேலும் காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு  பாராசிட்டமால் தவிர வேறு மருந்து எதுவும் தேவைப்படாது.

மேலும் அவர்களில் ஐந்தாவது நபர் வேண்டுமானால், மருத்துவரைப் பார்க்கலாம், மருத்துவமனையில் அனுமதிக்கலாம். அதிலும் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் குணமடையலாம்.

Coronovirus

இந்த கொரோனா வைரஸ்  குழந்தைகளை தீவிரமாக பாதிப்பது இல்லை. முதியவர்களைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. அதிலும்  நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களை விரைவில் பெரிதும் தாக்குகிறது. இதற்கு தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. ஆனால், விரைவில் கண்டறியப்படும்.

பொதுமக்கள், தங்களுக்கு கொரோனா வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால், உடனே சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்து பரிசோதனை செய்துவிடுங்கள். பின்னர் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.  கைகளை நன்றாக கழுவ வேண்டும், முகத்தில் கைவைப்பது போன்ற பழக்கத்தை விடவேண்டும் என்று கூறியுள்ளார்.