இந்தியா

கணவனுடன் சண்டை.. 4 மாத பெண் குழந்தையுடன் ரயிலில் ஏறிய தாய்.. நடுவழியில் காத்திருந்த அதிர்ச்சி

Summary:

கணவனுடன் சண்டைபோட்டு ரயிலில் ஏறிச்சென்ற பெண் தவறான அறிமுகத்தால் 4 மாத பெண் குழந்தையை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

கணவனுடன் சண்டைபோட்டு ரயிலில் ஏறிச்சென்ற பெண் தவறான அறிமுகத்தால் 4 மாத பெண் குழந்தையை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

புனே அகமது நகர் ராகட்டா பகுதியை சேர்ந்தவர் மஞ்சு மோரே (22). இவருக்கு திருமணம் முடிந்து 4 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. சம்பவத்தன்று மஞ்சு மஞ்சு மோரே தனது கணவருடன் சண்டைபோட்டுவிட்டு, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி தனது சகோதரி வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளர். இதனை அடுத்து 4 மாத பெண் குழந்தையுடன் சத்தாரா நோக்கி செல்லும் ரயிலில் எறியுள்ளார் மஞ்சு மோரே. அப்போது அப்போது ரயிலில் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த அருணா பவார்(35) என்ற முன்பின் அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் மஞ்சு மோரேவிடம் நெருக்கமாக பேசியுள்ளார்.

அவரது பேச்சில் மயங்கிய மஞ்சு மோரே, தனது கணவருடன் சண்டைபோட்டுவிட்டு தற்போது சகோதரி வீட்டிற்கு போவதாகவும், தனது கஷ்ட நஷ்டங்கள் எல்லாவற்றையும் அருணா பவரிடம் கூறியுள்ளார். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட அருணா, அவரை சமாதானம் செய்வதுபோல் ஹடப்சரில் தன்னுடன் இறங்கும்படி தெரிவித்துள்ளார்.

மஞ்சு மோரேவும் தனது குழந்தையுடன் அருணா பவார் கூறிய இடத்தில் இறங்கியுள்ளார். அங்கு ஹோட்டல் ஒன்றில் உணவருந்த செல்லலாம் என கூறி, அருணா மஞ்சு மோரேவை அழைத்துள்ளார். அவரும் அங்கு செல்ல, சந்தர்ப்பம் பார்த்து அருணா மஞ்சு மோரேவின் நான்கு மாத குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளார்.

குழந்தை காணாமல் போனதை அடுத்து மஞ்சு மோரே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அருணா பவார் மஞ்சரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் அருணா பவாரை கைது செய்து, அவர் கடத்திச்சென்ற நான்கு மாத பெண் குழந்தையை மீட்டு மஞ்சுவிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement