இந்தியா

எல்லாம் அதனால்தான்.. கைக்குழந்தையுடன் சாக்கடைக்குள் விழுந்த இளம்பெண்! வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ!!

Summary:

எல்லாம் அதனால்தான்.. கைக்குழந்தையுடன் சாக்கடைக்குள் விழுந்த இளம்பெண்! வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் என்பது மக்களுக்கு கிடைத்த வரமாகவும், சாபமாகவும் உள்ளது. மேலும் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எப்போதும் செல்போனும் கையுமாக உள்ளனர். மேலும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் குழந்தைகள் மொபைல் போனில் புகுந்து விளையாடுகின்றனர்.

மேலும் பெரியவர்களும் கையில் மொபைல் போன் இருந்தால் உலகையே மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர். இவ்வாறு கைக்குழந்தையுடன் செல்போனில் பேசிக்கொண்டே சென்ற பெண் திறந்து வைத்திருந்த சாக்கடையில் விழுந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது இடுப்பில் குழந்தையுடன் செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு தோண்டப்பட்டிருந்த குழியை கவனிக்காமல் சென்று அவர் குழந்தையுடன் குழிக்குள் விழுந்து விட்டார். ஆனால் அங்கு ஏற்கனவே எச்சரிக்கை  பலகை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்தப் பெண் போன் பேசும் ஆர்வத்தில் சென்று குழிக்குள் தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement