இந்தியா

தொடர்ந்து வற்புறுத்தினாங்க! தூக்கில் தொங்கிய இளம் பெண்மருத்துவர்! சிக்கிய பகீர் கடிதம்!

Summary:

Women doctor commit suicide in kolkatta

கொல்கத்தா, புருலியா மாவட்டம் ரகுநாத்பூரில் வசிப்பவர் மன்சி மண்டல். 26 வயது நிறைந்த இவர் பயிற்சி மருத்துவராக உள்ளார். அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சைக்கான முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மன்சி மண்டல் தனது தோழிகள் இருவருடன் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். 

இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்பு, மன்சியுடன் அறையில் தங்கியிருந்தவர்கள் வகுப்பிற்கு சென்றுவிட்ட நிலையில் அவர் மட்டும் விடுதி அறையில் இருந்துள்ளார். அப்பொழுது மன்சியின் பெற்றோர்கள் அவருக்கு தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால் மன்சி போனை எடுக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் அவரது தோழிகளுக்கு போன் செய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அறைக்கு வந்த மன்சியின் தோழிகள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மன்சி தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட  தோழிகள் கதறி அழுதுள்ளனர்.

மேலும் அங்கு மன்சி இறுதியாக எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தினர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள் இதனால் நான் மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளேன் என எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் மன்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து அவரது பெற்றோர்களிடம் தீவிரமாக விசாரித்தும் வருகின்றனர்.


Advertisement