7 கி.மீ. நடந்தே சென்று பல் மருத்துவமனையில் குழந்தை பெற்ற கர்ப்பிணி.! ஊரடங்கால் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!



women-delivered-a-baby-in-dental-hospital-at-bangalore

பெங்களூருவில் ஊரடங்கு சமயத்தில் மருத்துவமனையை தேடி, சுமார் 7 கிலோமீட்டர் நடந்தே சென்ற இளம் பெண்ணிற்கு பல் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். போக்குவரத்துக்கு வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையியல், பிரசவம் போன்ற அவசரத்திற்கு கூட உதவிகள் கிடைக்காமல் சிலர் பெரிதும் திண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான பெண் ஒருவர் திடீரென தனக்கு வயிற்று வலி ஏற்படவே தனது கணவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை ஏதும் அருகில் உள்ளதா என தேடி சுமார் 7 கிலோமீட்டர் நடந்துள்ளார். 7 கிலோமீட்டர் நடந்தே சென்ற அவர்கள் அந்த பகுதியில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றிற்குள் சென்றுள்ளன்னர்.

பல்மருத்துவமனையில் பணியில் இருந்த பல் மருத்துவர் ரம்யா இளம் பெண்ணின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், நீண்ட தூரம் நடந்தே வந்த களைப்பில் அந்த பெண் மருத்துவமனைக்கு வந்த 5-10 நிமிடங்களில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதை பற்றி கூறியுள்ள மருத்துவர் ரம்யா, குழந்தை பிறந்ததும் அந்த குழந்தை இறந்துவிட்டதாகத்தான் நாங்கள் அனைவரும் நினைத்தோம். அதே சமயம் அந்த பெண்ணிற்கும் அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை தருவதில்லையே நாங்கள் தீவிரமாக இருந்தோம்.

அதனை தொடர்ந்து ஒருசில சிகிச்சைகள் மூலம் குழந்தையையும் நாங்கள் காப்பற்றிவிட்டோம். பின்னர், தாய் சேய் இருவரையும்  கே.சி. அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக பல் மருத்துவர் ரம்யா தெரிவித்துள்ளார்.