இது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..

இது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..


women-complaints-on-doctors-neat-tirupathi

குழந்தையை தன்னிடம் கொடுக்கவில்லை என பெண் புகார் தெரிவிக்க, அவர் கர்ப்பமே அடையவில்லை என மருத்துவர்கள் கூறும் வினோத சம்பவம் ஒன்று ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கா நெல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் சசிகலா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், கடந்த 5 ஆம் தேதி திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் சோதனை செய்துகொண்டதாகவும், பின்னர் ஜனவரி 16-ம் தேதி மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்து சேர்ந்துகொள்ளுமாறு மருத்துவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல், சசிகலா கர்ப்பமாக இருந்தபோது பல்வேறு விதமான மருத்துவமனையில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி நேற்று சசிகலா திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து, தன்னை பிரசவத்திற்கு சேர்த்து கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து நேற்று மாலை முதல் இன்று காலை வரை தனக்கு பல்வேறு விதமான பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சசிகலா, அதன் பிறகு தனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டநிலையில் நான் மயங்கிவிட்டேன் எனவும், அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண்விழித்து பார்த்தபோது எனக்கு குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் நான் பெற்ற குழந்தையை என்னிடம் கொடுக்கவில்லை என்று சசிகலா கூறுகிறார்.

ஆனால், மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுக்கு கர்ப்பமே ஏற்படவில்லை எனவும், அவருக்கு குழந்தையே பிறக்கவில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சசிகலா மீது திருப்பதி மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சசிகலா மற்றும் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், தனக்கு கர்ப்பம் ஏற்பட்டது உண்மையே என்பதற்கு ஆதாரமாக சசிகலா வளைகாப்பு நடத்தப்பட்டது தொடர்பான போட்டோ மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஸ்கேன் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகள் அடங்கிய அறிக்கையை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போன போலீசார், சசிகலாவுக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா என்பதை  வேறு ஒரு மருத்துவர் மூலம் கண்டறிய முடிவு செய்துள்ளனர். இந்நிலையியல் இந்த வினோத சம்பவம் குறித்து அந்த பகுதி முழுவதும் பரவலாக பேசப்பட்டுவருகிறது.