பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை... தலைமறைவான மாமியார் குடும்பம்... சிக்கிய கடிதம்.!

பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை... தலைமறைவான மாமியார் குடும்பம்... சிக்கிய கடிதம்.!


woman-lawyer-commits-suicide-mother-in-law-and-family-e

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹீனா பானோட்(28). கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. கணவர் மற்றும் தனது பெண் குழந்தையுடன் கிராண்ட் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே சொத்து காரணமாக பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.

Indiaஇதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் ஹீனா தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வந்தனர்.

Indiaஇந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக ஹீனா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் காவல்துறையிடம் கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் தனது சாவிற்கு மாமனார் மற்றும் மாமியார் தான் காரணம் என அவர் எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் அவரது மாமனார் குடும்பம் தலைமறைவாக இருக்கிறது.