"உயிரை பறித்த லிவிங் டுகெதர்... " இளம்பெண் மர்ம மரணம்.!! காதலன் சூழ்ச்சியா.?



woman-in-live-in-relationship-mysteriously-death-lover

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லிவிங் டுகெதர் உறவிலிருந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணத்திற்கு காதலனே காரணமென இறந்த பெண்ணின் உறவினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவை சேர்ந்தவர் இல்ஹாம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். மேலும் காதலர்கள் இருவரும் திருமணம் முடிக்காமல் ஒன்றாக சேர்ந்து வாழும் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இல்ஹாம் தான் வாழ்ந்த வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

uttarapradesh

இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இல்ஹாம் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையிடம் பேசிய அவர் தனது மருமகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தனக்கு சந்தேகமிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: துயரத்தில் முடிந்த சந்திப்பு... காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்.!!

இது தொடர்பாக காவல்துறையிடம் பேசிய ஆசாத், இல்ஹாமின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அவரது காதலன் தான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை செய்யும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "உயிரை பறித்த ரகசியம்..." காதல் மனைவி கொடூர கொலை.!! கணவன் பகீர் வாக்குமூலம்.!!