இந்தியா

இதுதான் சார் கடவுள் மனசு! அண்ணன் திருமணத்தன்று தங்கை செய்த வேற லெவல் காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!

Summary:

அடேங்கப்பா.. இதுதான் சார் கடவுள் மனசு! அண்ணன் திருமணத்தன்று இரவில் தங்கை செய்த வேற லெவல் காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அண்ணன் திருமணத்தில் எஞ்சிய உணவுகளை தானே முன்வந்து ரயில் நிலையத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்காலத்தில் திருமணங்கள் திருவிழாக்களை போல முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உறவினர்களுக்கு பத்தாமல் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான உணவுகள் சமைக்கப்படுகிறது. அதனால் சில  நிகழ்ச்சிகளில் உணவுகள் பெருமளவில் வீணாகக் குப்பையில் கொட்டப்படுகிறது.

இந்த நிலையில் அத்தகைய உணவுகளை ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தற்போது பல குழுக்கள் இயங்கி வருகிறது. அத்தகைய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு உணவு மிஞ்சியுள்ள தகவலை தெரிவித்தாலே போதும்.  அவர்களே வந்து உணவினை பெற்றுக்கொண்டு உணவின்றி தவிப்போர்க்கு வழங்குவர்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாரையும் எதிர்பாராமல் தனது அண்ணனின் திருமணத்தில் மிஞ்சிய உணவுகளை தானே முன்வந்து ரயில் நிலையத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆம் ஆடம்பரமான ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்த அவர் அமர்ந்து தானே அனைவருக்கும் உணவு கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவில் பரவி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement