துடிதுடிக்க மனைவி எரித்து கொலை... கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட கணவன்.! நெஞ்சை பதற வைக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன.?

துடிதுடிக்க மனைவி எரித்து கொலை... கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட கணவன்.! நெஞ்சை பதற வைக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன.?


woman-burnt-his-wife-alive-and-commits-suicide

கேரள மாநிலம் கொல்லம் அருகே இ சேவை மையத்தில் மனைவியை எரித்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி, நாவாயிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம். 50 வயதான இவருக்கும் நாதிரா என்ற பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாதிரா இ- சேவை மையத்தில் பணியாற்றி வந்தார்.

Indiaசமீபகாலமாகவே நாதிராவின் நடவடிக்கையில் அவரது கணவருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் நாதிராவை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார் ரஹீம்.

Indiaஇந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நாதீரா வழக்கம் போல் இ-சேவை மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ரஹீம் தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை நாதீராவின் மீது ஊற்றி அவர் சுதாகரிப்பதற்குள் தீ பற்ற வைத்தார். இந்த தாக்குதலில் நாதிரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் கருகி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து  தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அங்கிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் ரஹீம். இந்தக் கொடூர சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த இரண்டு பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.