தங்கத்தின் இறக்குமதி வரி குறையுமா..? சவரனுக்கு 3000 குறைய வாய்ப்பு...! மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கும் தங்க வியாபாரிகள்...!

தங்கத்தின் இறக்குமதி வரி குறையுமா..? சவரனுக்கு 3000 குறைய வாய்ப்பு...! மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கும் தங்க வியாபாரிகள்...!



will-the-import-duty-of-gold-be-reduced-gold-traders-lo

மத்திய பட்ஜெட்டில் வியாபாரிகளிடையே தங்கம் இறக்குமதி வரி மற்றும் அதன் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று வெளியிடுகிறார். இது அவரின் ஐந்தாவது பட்ஜெட் ஆகும். அடுத்த வருடம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதனால், மக்கள் மத்தியில் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது.

தங்கம் விற்பனையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்க வியாபாரிகள் மத்தியில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், சவரனுக்கு 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தொழில் வணிகத் துறைக்கு, கிராமப்புறப் பொருளாதார மேம்பாடு, உள்கட்ட அமைப்பு மேம்பாடு வரி சலுகைகள்,சுகாதாரம், சுற்றுலாத் துறை என பல எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.