இந்தியா

இறந்த மகளின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சி.! அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்! வெளியான பகீர் வீடியோ!

Summary:

wife suicide for husband torture

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் ஷம்ஷபாத் நகரில் வசித்து வந்த தம்பதி லாவன்யா - வெங்கடேஷ். இந்த தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த வியாழன் இரவு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரின் உறவினர்கள் உடனடியாக பெற்றோர் மற்றும் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

ஆனால் அவர்கள் செல்வதற்குள், வீட்டில் தனியாக இருந்த லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், லாவன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தற்கொலை தொடர்பான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில்,குழந்தை இல்லாததால் கணவரும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சல் கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் எனவும் இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக லாவண்யா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளை லாவண்யாவின் பெற்றோர் பார்த்துள்ளனர். அதில்,லாவண்யாவை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் இருந்துள்ளது.


Advertisement