இந்தியா Covid-19

இறந்த கணவரின் இறுதி சடங்கை வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுத மனைவி..! திருமண நாளன்று வந்த உறைய வைத்த அழைப்பு.!

Summary:

Wife sees husband funeral in video call in kerala

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கேரளாவில் இறந்த தனது கணவரின் இறுதி சடங்கை அவரது மனைவி துபாயில் இருந்து வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர்கள் ரீஜித் - பிஜிமோல் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரீஜித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 9 மாதங்களாக சக்கர நாற்காலி உதவியுடன் வாழந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தின் வறுமை காரணமாகவும், கணவனின் சிகிச்சைக்காகவும் பிஜிமோல் துபாய்க்கு வேலைக்காக செல்ல தீர்மானித்துள்ளார். இதனை அடுத்து தெரிந்தவர்களிடம் ரூ 3 லட்சம் கடனாக வாங்கி அதை ஏஜென்ட் ஒருவரிடம் கொடுத்து அவர் மூலமாக துபாய்க்கு சென்றுள்ளார் பிஜிமோல்.

துபாய் சென்ற பிறகுதான் தெரியவந்துள்ளது, ஏஜென்ட் வாங்கி கொடுத்தது ஒருமாத காலம் மட்டுமே செல்லுபடியாகும் சுற்றுலா விசா என்று. இதனால் மேலும் நொறுங்கிப்போன பிஜிமோல் அங்கேயே தங்கி சிலரின் உதவியுடன் வேலை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில்,  ரீஜித் - பிஜிமோல் திருமண நாளான நேற்று முன்தினம் உறவினர்களிடம் இருந்து பிஜிமோலுக்கு தொலைபேசி அழைப்பு ஓன்று வந்துள்ளது. அதில், கணவர் ரீஜித் இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கணவர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன பிஜிமோல் விமானங்கள் ஏதும் இயங்காததால் கணவரின் உடலை வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுதுள்ளார்.

வீடியோ காலில் அலுத்துக்கொண்ட இறந்த பிஜிமோலுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் அங்கிருந்தவர்கள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement